ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக கோடை மழை: பவானியில் 56.0 மில்லி மீட்டர்

ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக கோடை மழை: பவானியில் 56.0 மில்லி மீட்டர்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பவானியில் 56.0 மில்லி மீட்டர் மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயிலும், மாலையில் பரவலாக கோடை மழையும் பெய்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டுகிறது. நேற்று இரவு கடும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. பின்னர் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்:

ஈரோடு - 27.0 மி.மீ

கொடுமுடி - 4.8 மி.மீ

பெருந்துறை - 20.0 மி.மீ

பவானி - 56.0 மி.மீ

கோபிசெட்டிபாளையம் - 25.0 மி.மீ

சத்தியமங்கலம் - 7.0 மி.மீ

நம்பியூர் - 9.0 மி.மீ

சென்னிமலை - 21.0 மி.மீ

மொடக்குறிச்சி - 38.0 மி.மீ

கவுந்தப்பாடி - 41.4 மி.மீ

எலந்தகுட்டைமேடு - 8.2 மி.மீ

அம்மாபேட்டை - 44.0 மி.மீ

கொடிவேரி - 5.0 மி.மீ

குண்டேரிப்பள்ளம் - 15.2 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 321.6 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 18.91 மி.மீ

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!