ஈரோடு மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்!

ஈரோடு மாவட்டத்தில் 5 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கடத்தூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார், திருப்பூர் மாவட்டம் நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவுக்கும், மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் திருஞானசம்பந்தன், திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலையத்துக்கும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல், புளியம்பட்டி காவல் ஆய்வாளர் சுப்புரத்தினம் நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலையத்துக்கும், அறச்சலூர் காவல் ஆய்வாளர் ராஜகண்ணன் நீலகிரி மாவட்டம் சேரம்பாடி காவல் நிலையத்துக்கும், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜபிரபு, திருப்பூர் மாவட்டம் அவினாசி காவல் நிலையத்துக்கும் என 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற ராம்பிரபு கடத்தூர் காவல் நிலையத்துக்கு, சேலம் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராக இருந்த செந்தில்குமார், கொடுமுடி காவல் ஆய்வாளராகவும், சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஸ்ரீதேவி, ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், பங்களாப்புதூர் காவல் ஆய்வாளராகவும், சேரம்பாடி காவல் ஆய்வாளர் துரைபாண்டி அறச்சலூர் காவல் ஆய்வாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu