ஈரோடு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர்

ஈரோடு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர்
X
ஈரோட்டில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் கடந்த 2008-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி தமிழ் தேச பொதுவுடமை கட்சி சார்பில் தமிழர் எழுச்சி உரை வீச்சு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் பங்கேற்று பேசினர். இதில், இவர்கள் மூவரும் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் ஈரோட்டில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உள்ளார்.

Tags

Next Story
ai marketing future