அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து, நாளை (மார்ச் 9ம் தேதி) புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து, நாளை (மார்ச் 9ம் தேதி) புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
X

வரட்டுப்பள்ளம் அணை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக நாளை (மார்ச் 9ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்படுகிறது.

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

2024-2025ம் ஆண்டு, ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து புதிய ஆயக்கட்டு 2,924 ஏக்கர் பாசனப் பகுதிகளுக்கு 09.03.2025 முதல் 16.06.2025 வரை 100 நாட்கள் தொடரில் 6 நனைப்புகளாக (75 நாட்கள் தண்ணீர் திறப்பு 25 நாட்கள் தண்ணீர் நிறுத்தம்) என்ற அடிப்படையில் 96.940 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அணையின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story