வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.82 அடியாக உயர்வு

வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.82 அடியாக உயர்வு
X

வரட்டுப்பள்ளம் அணை.

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.82 அடியாக உயர்வு; 46.2 மி.மீ மழை பெய்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. அந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கோடைக்காலங்களில் வன விலங்குகளுக்கும், விவசாய பாசனத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த அணையின் முழு கொள்ளளவு 33.46 அடியாகும். கடந்த வாரம் முதல் வரட்டுப்பள்ளம் அணை சுற்று வட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அணையில் 30.40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 31.82 அடியாக உயர்ந்தது. மேலும் நேற்று இரவு பர்கூர் சுற்று வட்டார பகுதிகளில் 46.20 மி.மீ மழை பொழிந்தது. இதேபோல் பொழிந்தால் வரட்டுப்பள்ளம் அணை விரைவில் நிரம்பும் என‌ எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story