/* */

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 47 அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை இன்று காலை 8 மணி நிலவரப்படி 47.72 அடியாக சரிந்தது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 47 அடியாக சரிவு
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 47.72 அடியாக சரிந்தது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி முதல் கீழ்பவானி இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 4வது சுற்றுக்கான தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால், பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து 31 கன அடியாக உள்ளது.

மேலும், அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 47 அடியாக சரிந்துள்ளது.

வியாழக்கிழமை (ஏப்ரல் 04) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 47.72 அடி ,

நீர் இருப்பு - 3.90 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 31 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 150 கன அடி ,

பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் மட்டும் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Updated On: 4 April 2024 3:15 AM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிகபட்சமான வாக்குப்பதிவு
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த பெண்...
 3. திருவண்ணாமலை
  சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
 4. ஆரணி
  ஆரணி அறம் வளர் நாயகி கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர் திருவிழா
 5. குமாரபாளையம்
  ஈரோடு நாடாளுமன்ற தொகுதி குமாரபாளையத்தில் 74.06 சதம் ஓட்டுப்பதிவு
 6. இந்தியா
  சொந்தமாக ஒரு கார் கூட இல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா
 7. லைஃப்ஸ்டைல்
  பூசணி விதைகளின் நன்மைகள் மற்றும் பயன்கள்
 8. லைஃப்ஸ்டைல்
  ஆமணக்கு எண்ணெய் தரும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
 9. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
 10. ஈரோடு
  பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!