பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 982 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 982 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணைப் பகுதி.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 609 கன அடியிலிருந்து 982 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 609 கன அடியிலிருந்து 982 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்மை காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்து, அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிந்தது. இந்நிலையில், கடந்த வாரம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால், அணையின் நீர்மட்டம் 9 அடி உயர்ந்தது.

இதனிடையே, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்று (மே.29) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 609 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே.30) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 982 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 54.07 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 54.24 அடியாக உயர்ந்ததுள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 5.53 டிஎம்சியாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!