பவானிசாகர் அணை நீர்வரத்து 592 கன அடியாக சரிவு

பவானிசாகர் அணை நீர்வரத்து 592 கன அடியாக சரிவு
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (ஜூன்.6) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 709 கன அடியிலிருந்து 592 கன அடியாக சரிந்தது.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (ஜூன்.6) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 709 கன அடியிலிருந்து 592 கன அடியாக சரிந்தது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்த படியாக 2வது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழையின்மை காரணமாக அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து, அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிந்தது. இதனிடையே, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது.

இந்நிலையில், தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது. நேற்று (ஜூன்.5) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 709 கன அடியாக இருந்த நிலையில், இன்று (ஜூன்.6) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 592 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 150 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 155 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 56.03 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 56.14 அடியாக உயர்ந்தது. அணையில் நீர்இருப்பு 6.07 டிஎம்சியாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!