கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 500 கனஅடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணை யில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்திற்காக ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் தடுப்பு சுவர் கட்டும் பணி மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வழக்கம்போல் ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்ப டும் என அரசாணை வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 15ம் தேதி பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் பாசன விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வாய்க்கால் சீரமைப்பு பணிகள் முடிவடையாததால் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 3 நாட்களில் பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்படும் என நீர் வளத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்த நிலையில் தற்போது சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததுள்ளது
இதனால் நேற்று முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு முதற்கட்டமாக 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 500 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்க ப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.76 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 162 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்திற்காக தடப்பள்ளி அரக்கன் கோட்டை க்கு 500 கனஅடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 350 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 1450 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu