தாளவாடி ஊராட்சி மன்ற தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள் புகார்

தாளவாடி ஊராட்சி மன்ற தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள் புகார்
X

புகார் அளிக்க வந்த உறுப்பினர்கள்.

தாளவாடி ஊராட்சி மன்ற தலைவர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக வார்டு உறுப்பினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சியில் 15 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்த ஊராட்சியின் தலைவராக தீயக்காஷியினி உள்ளார். இந்நிலையில் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை பணிகளை வார்டு உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் ஊராட்சி தலைவரின் கணவர் குமார் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் செய்த பணிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் முறைகேடாக பணத்தை எடுத்துள்ளதாகவும், இதைப்பற்றி உறுப்பினர் கேட்டால் மிரட்டல் விடுவதாகவும் வார்டு உறுப்பினர்கள் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!