ஈரோடு: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 70.73 சதவீதம் வாக்குப்பதிவு

ஈரோடு: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 70.73 சதவீதம் வாக்குப்பதிவு
X

கோப்பு படம்.

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 70.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்காக இன்று தேர்தல் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 769 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 2,722 பேர் போட்டியிடுகின்றனர். இதனையொட்டி, மாவட்டம் முழுவதும் 1,219 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 9 லட்சத்து 84 ஆயிரத்து 113 பேர் வாக்களிக்க இருந்தனர். வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு உள்ள நிலையில், பதற்றமான 187 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில், நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கணிகாணித்து வந்தனர்.

அதன்படி இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு, இன்று 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்தத் தேர்தலில் அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சியில் 74.14 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநகராட்சிகளில் 61.91 சதவிகிதமும், பேரூராட்சிகளில் 79.42 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதில், நகராட்சியில் 96,195 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதேபோல், மாநகராட்சிகளில் 2,72,249 பேரும், பேரூராட்சிகளில் 3,14,139 பேரும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 70.73 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Tags

Next Story
ரூ.2 கோடி மோசடி..! துணை தாசில்தாரை ஏமாற்றிய சென்னை வாலிபர் கைது..!