அந்தியூர் பேரூராட்சியில் 22 இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது

அந்தியூர் பேரூராட்சியில் 22 இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது
X

அந்தியூர் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள வார்டு 2க்கான வாக்குச்சாவடி மையம்.

அந்தியூர் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 22 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அந்தியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியில் உள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு 6 மையங்களில் 22 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிப்பட்டது.

வாக்குப்பதிவு நாளான இன்று காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிப்பு கண்காணிக்கப்படுகிறது. மேலும் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு பதிவானது நடைபெறுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!