அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் வி.கே.சசிகலா சாமி தரிசனம்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் வி.கே.சசிகலா சாமி தரிசனம்
X

அந்தியூர் பத்ரகாளியம்மனை தரிசனம் செய்த வந்த சசிகலா.

அந்தியூரில் புகழ்பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் வழிபாடு செய்த வி.கே.சசிகலாவுக்கு மேளதாளம் முழுங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் நேற்றும் இன்றும் ஆன்மிக சுற்றுப்பயணத்தை வி.கே.சசிகலா மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் வி.கே.சசிகலா சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பூர்னகும்ப மரியாதையுடன் மேளதாளம் முழுங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன் பின்னர் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்த பத்ரகாளியம்மனை தரிசனம் செய்த வி.கே.சசிகலா தொடர்ந்து ஆதரவாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யபட்டிருந்த அன்னதானத்தை பக்தர்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து அவரது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை அளித்தார். மேலும் அவருடன் தொண்டர்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சியடைந்தனர். முன்னாத திருநங்கைகள் சசிகலா காரின் முன்பு நடனமாடி வரவேற்று குறைகளை தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!