ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வன்கொடுமை விழிப்புணர்வு கண்காணிப்பு குழு கூட்டம்

ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வன்கொடுமை விழிப்புணர்வு கண்காணிப்பு குழு கூட்டம்
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்  மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று‌ (டிச.31) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை, வீட்டுமனைப் பட்டா, தார்சாலை வசதி, மின் மயான வசதி, இழப்பீட்டுத் தொகை, சமுதாயக் கூடம் மற்றும் சிறப்பு நூலகம், கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கு வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, தொகுப்பு வீடுகள் சீரமைத்தல், மருத்துவ சிகிச்சை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளின் மீது மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை அவர் பெற்றுக்கொண்டு, தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கையினை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில், வன்கொடுமை தொடர்பான வழக்குகள் மற்றும் உவித்தொகை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், விழிக்கண் குழு உறுப்பினர்கள் மற்றும் துறைசார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story