ஈரோடு ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர்கள் பணி

ஈரோடு ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர்கள் பணி
X

பைல் படம்

ஈரோடு ஆவின் சார்பில் கால்நடை மருத்துவ ஆலோசகர்கள் பணிக் காலியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானோா் 27-ம் தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.

ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) சார்பில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கால்நடை மருத்துவ பட்டதாரிகளிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில், மாத சம்பளம் மற்றும் இதர படிகள் சேர்த்து ரூ.43 ஆயிரம் என்ற நிலையில் கால்நடை மருத்துவ ஆலோசகராக பணியாற்ற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பணியாற்ற விருப்பம் உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர்கள், தங்களின் முழு விபரங்களுடன் உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ ஆணை சான்றிதழ்களுடன் வரும் விருப்பமுள்ளவர்கள் வருகிற ஜூலை 27-ம் தேதி காலை 11 மணிக்கு ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!