ஈரோடு மாவட்டம் முழுவதும் விடிய விடிய சாரல் மழை

ஈரோடு மாவட்டம் முழுவதும் விடிய விடிய சாரல் மழை
X
ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு ஏரி, குளங்கள் தொடர் மழையால் நிரம்பி வழிகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர், சத்தியமங்கலம், பண்ணாரி, திம்பம், தாளவாடி மற்றும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை கொட்டி கொண்டே இருந்தது. இதன் காரணமாக தாளவாடி பகுதியில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டிருந்த தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. மேலும் பல்வேறு ஓடைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை வெள்ளம் பையனாபுரம், திகனாரை, தொட்டகாஜனூர், சிக்கள்ளி, தாளவாடி வழியாக கர்நாடக மாநிலம் சிக்கொலா அணைக்கும் ஆசனூர், கெத்சேசால், கேர்மாளம் ஆகிய வனத்தில் பெய்த மழைநீர் சொர்ணாவதி அணைக்கும் செல்கிறது. அங்கு உள்ள இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வீணாக செல்லும் மழைநீரை அணைக்கட்டி தடுக்க வேண்டும் என்பது தாளவாடி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதேபோல் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னிமலை அருகில் உள்ள ஒரத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 நிரம்பி உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையில் இருந்து நுரை பொங்க தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு ஏரி, குளங்கள் தொடர் மழையால் நிரம்பி வழிகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!