42 ஆண்டுகளுக்கு பின் கோடை காலத்தில் நிரம்பிய வரட்டுப்பள்ளம் அணை

42 ஆண்டுகளுக்கு பின் கோடை காலத்தில் நிரம்பிய வரட்டுப்பள்ளம் அணை
X

கோடை காலத்தில் நிரம்பிய வரட்டுப்பள்ளம் அணை.

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையானது 42 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக கோடை காலத்தில் அணை நிரம்பியுள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக இன்று அதிகாலை அதன் முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டி உபரி நீரானது வெளியேறி வருகிறது.

அணைக்கு 54 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அந்த நீர் அப்படியே வெளியேறி அந்தியூரில் உள்ள பெரிய எரிக்கும், கெட்டிசமுத்திரம் எரிக்கும் செல்ல தொடங்கியது. கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி அணை நிரம்பியது.

இந்த நிலையில் 7 மாதத்தில் அணை மீண்டும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. அணை நிரம்பி ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் 42 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக மே மாதத்தில் அணை நிரம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில் அக்னி நட்சத்திரத்தில் மழை பெய்து அணை நிரம்பி இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மழை இல்லை என்றாலும் குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு தேவைகளுக்கு தற்போது உள்ள அணையின் நீர் பூர்த்தி செய்யும் எனவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அணை நிலவரம்:

அணையின் நீர்மட்டம் - 33.46/33.46 அடி,

ணையின் நீர் இருப்பு -139.60/ 139.60 மில்லியன் கன அடி,

அணைக்கு நீர்வரத்து 54 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ள நிலையில் அப்படியே அந்த நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

Tags

Next Story