அந்தியூரில் குடும்ப தகராறு காரணமாக வேன் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

அந்தியூரில் குடும்ப தகராறு காரணமாக வேன் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
X
பைல் படம்.
அந்தியூர் அருகே பிரம்மதேசம் பகுதியில் குடும்ப தகராறில் வேன் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). லோன் வேன் டிரைவர். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்படவே ராஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனியா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ராஜேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
அல்சர் A to Z...அறிகுறிகள் முதல் தடுப்பு வழிகள் வரை..!உடனே இதை தெரிஞ்சுக்கோங்க..