பவானி அருகே பைக் மீது வேன் மோதி விபத்து: பள்ளி மாணவர் உயிரிழப்பு

பவானி அருகே பைக் மீது வேன் மோதி விபத்து: பள்ளி மாணவர் உயிரிழப்பு
X

விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவர் பிரதீப்.

பவானி அருகே ஒரே பைக்கில் 3 பேர் சென்றபோது, வேன் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த பெருந்தலையூரை சேர்ந்தவர் பிரதீப் (16). பள்ளி மாணவர். இவர் தனது நண்பர்களான கவுந்தபாடியை சேர்ந்த வேதமூர்த்தி (15) மற்றும் பவானி தாட்டர்பாளையத்தை சேர்ந்த சதீஸ்குமார் (25) ஆகியோருடன் கேட்டரிங் வேலை தொடர்பாக அந்தியூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

பிரதீப் சைக்கிளை மோட்டார் ஓட்ட நடுவில் வேதமூர்த்தியும், அவருக்கு பின்னால் சதீஷ்குமாரும் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிள் பவானி ரோட்டில் அந்தியூர் சென்று கொண்டிருந்தபோது நல்லிபாளையம் பிரிவு அருகே வந்த போது எதிரே வந்து கொண்டிருந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக பிரதீப் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் தேவமூர்த்தி, சதீஷ்குமார் இருவருக்கும் கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரதீப் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விரைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரதீப்பை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த தேவமூர்த்தி, சதீஷ்குமார் 2 பேரும் பவனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!