அந்தியூர் அடுத்த பர்கூரில் மஞ்சள் ஏற்றி வந்த, பிக்கப் வேன் கவிழ்ந்து விபத்து

அந்தியூர் அடுத்த பர்கூரில் மஞ்சள் ஏற்றி வந்த, பிக்கப் வேன் கவிழ்ந்து விபத்து
X

விபத்துக்குள்ளான பிக்கப் வேனை படத்தில் காணலாம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூரில் மஞ்சள் ஏற்றி, வந்த பிக்கப் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்குதியில் 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதில் தாமரைக்கரையில் இருந்து கிழக்கு மலையில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வனத்துறை சாலைகள் கடந்த 10 வருடங்களுக்கு மேல் சேதமடைந்த நிலையில் உள்ளது.இந்த சாலை தற்காலிகமாக செம்மண் போடப்பட்டு இருப்பதால் புதுப்பிக்ககோரி மலை கிராம மக்கள் நீண்ட வருடங்களாக வலியுறுத்தி வரும் நிலையில் இன்று கல்வாரை பகுதியை சேர்ந்த சித்தன் என்பவர் ஈரோட்டிற்கு மஞ்சள் மூட்டைகளை எடுத்து சென்ற போது,மழை பெய்துள்ள காரணமாக சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துகுள்ளனதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் போலீசார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் வாகனத்தை மீட்டனர்.மேலும் அதிர்ஷ்டவசமாக வாகனத்தை ஓட்டி வந்த விவசாயி சித்தன் உயிர் தப்பினார்.மேலும் நேற்று இதே போன்று பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்தும் சகதியில் சிக்கி கொண்டதால் பேருந்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.இதனால் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர தேவைக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது என மலை கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் வனத்துறை சாலையை நெடுஞ்சாலை கைப்பற்றி சாலையை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil