கால்நடைகளுக்கு விரைவில் கோமாரி நோய்த் தடுப்பூசி: ஆட்சியர்

கால்நடைகளுக்கு விரைவில் கோமாரி நோய்த் தடுப்பூசி: ஆட்சியர்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

மழைக்காலங்களில் கால்நடைகளுக்குப் பரவும் கோமாரி நோயைத் தடுப்பதற்காக தடுப்பூசிகள் செலுத்துவது வழக்கம். மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. மாநில அரசிடமிருந்து மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை மற்றும் தேவையான தடுப்பூசிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எனவே, விரைவில் ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil