அந்தியூர் அருகே தடுப்பூசி போட தாமதம்: காவல் நிலையம் முற்றுகை

அந்தியூர் அருகே தடுப்பூசி போட தாமதம்: காவல் நிலையம் முற்றுகை
X

ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் திரண்ட கிராம சுகாதார செவிலியர் சங்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள்.

அந்தியூர் அருகே குழந்தைக்கு தடுப்பூசி போட தாமதமானதால் நர்சை தாக்க முயற்சி நடந்தது. இதைக்கண்டித்து காவல் நிலையத்தை மருத்துவ பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளையம்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணி புரிபவர் சுகன்யா (30). இவர் கூத்தம்பூண்டி கிராமப்பகுதியில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கூத்தம்பூண்டி அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கூத்த பூண்டி பகுதியைச் சேர்ந்த கிருத்திகா என்பவர் அவர்களின் குழந்தைக்கு தடுப்பூசி போட வந்துள்ளார். ஆனால் அவர் தடுப்பூசி போட தாமதமாக வந்ததன் காரணமாக கிருத்திகாவின் தயாரான காவிரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாமதமாக தடுப்பூசி போட அனுப்பி உள்ளீர்கள் என கேட்டுள்ளார்.

இதற்கு காவேரி சுகன்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது . காவேரியின் வீடு துணை சுகாதார நிலைய குடியிருப்பு அருகே இருப்பதன் காரணமாக சுகன்யா காவேரியிடம் சென்று எதற்காக தகாத வார்த்தையில் திட்டினீர்கள் என கேட்டதற்கு, காவேரி சுகன்யாவை தாக்க முற்பட்டுள்ளதாகவும், அப்போது கூத்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்த சுகன்யாவின் மாமியார் எழுந்திரம்மாள் தடுத்துள்ளார்.

அப்போது எழுந்திருமாளை காவேரி கடுமையாக தாக்கியுள்ளார். தொடர்ந்து அங்கிருந்துவர்கள் எழுந்திரும்மாளை மீட்டு அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது தொடர்பாக ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவே சுகன்யா புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து இரவு நேரம் என்பதால் அடுத்த நாள் விசாரிப்பதாக கூறி சுகன்யாவை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து நேற்று காவல் நிலையத்திற்கு சென்றபோது புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் சமாதானம் பேச ஆப்பக்கூடல் போலீசார் முயன்றுள்ளனர் .

தொடர்ந்து சுகன்யா இது குறித்து செவிலியர் சங்கத்தில் முறையிட்டதன் காரணமாக செவிலியர் சங்கத்தின் மாநில தலைவர் செந்தாமலர், பொது செயலாளர் உஷாராணி, மாவட்ட செயலாளர் வெற்றிசெல்வி உள்ளிட்டோர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடமும் போலீசார் சமாதானம் பேசவே முற்பட்டுள்ளனர். தொடர்ந்து இது குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றதை யடுத்து பவானி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷனி காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து உயர்அதிகாரிகளிடம் பேசி வழக்கு பதிவு செய்வதாக கூறி அனுப்பி வைத்தார். இதுகுறித்து கிராம சுகாதார செவிலியர் சங்க மாநிலத் தலைவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு ஊழியர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கட்டப்பஞ்சாயத்து செய்ததற்கு கண்டனம் தெரிவிப்பதோடு உரிய விசாரணை செய்து செவிலியரை தகாத வார்த்தைகள் திட்டி பணி செய்யவிடாமல் தடுத்தும் அவரை தாக்க முற்பட்டபோது, அதை தடுக்க வந்த அவரது மாமியாரை தாக்கியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதற்கிடையே கிராம சுகாதார செவிலியர் சங்கத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜசேகர், மாவட்ட செயலாளர் வெங்கிடு உள்ளிட்டோரும் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்