ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்
X

கோப்பு படம்.

ஈரோடு மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் தொடங்குகிறது.

கால்நடை பராமரிப்புத் துறை மூலம் வெள்ளாடுகள். செம்மறியாடுகளைத் தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயை தடுக்கும் வகையில். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன் படி, நடப்பாண்டுக்கான ஆட்டுக்கொல்லி தடுப்பூசிகள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் செலுத்தப்பட உள்ளது.

இதற்காக, தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு, அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளது.மாவட்டத்தில் வெள்ளாடு, செம்மறியாடு கள் வளர்ப்போர் இத்தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story