ஈரோடு மாவட்டத்தில் இன்றைய கொரோனா தாெற்று பாதிப்பு நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய கொரோனா தாெற்று பாதிப்பு நிலவரம்
X
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 6 ஆயிரத்து 323 பேருக்கு பரிசோதனை செய்ததில், 51 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 108 ஆக உயர்ந்தது.

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 58 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 813 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 705 ஆக உள்ளது. தற்போது தொற்று உள்ள 590 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!