நகர்புற உள்ளாட்சி தேர்தல்: அருந்ததியர் இளைஞர் பேரவை திமுக-விற்கு ஆதரவு

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: அருந்ததியர் இளைஞர் பேரவை திமுக-விற்கு ஆதரவு
X

அருந்ததியர் இளைஞர் பேரவையினர் திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்க வந்தபோது எடுத்த படம்.

ஈரோட்டில் முகாம் அலுவலகத்தில், அருந்ததியர் இளைஞர் பேரவையினர் அமைச்சர் முத்துசாமியை சந்தித்து திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஈரோடு பெரியார் நகரில் உள்ள வீட்டுவசதிக்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில், அருந்ததியர் இளைஞர் பேரவையினர் அமைச்சர் முத்துசாமியை சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது: பன்னீர்செல்வம் பூங்காவில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்காரின் சிலையை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நிறுவ உத்திரவிட்டு அதனை செயல்படுத்தி காட்டியதற்காகவும், பட்டியல் இன மக்களின் 50 ஆண்டு கால கனவை நினைவாக்கிய தமிழக முதல்வருக்கு நன்றியினை தெரிவித்தனர்.

தொடர்ந்து, நடை பெற்று கொண்டுள்ள சமூகநீதி ஆட்சியை ஆதரித்தும், சமூகநீதி கண்காணிப்பு குழு அமைத்தும், சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்த திமுகவிற்கு நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரவு தெரிவிப்பதாகவும் கடிதத்தில் கூறிியிருந்தனர். இதனையடுத்து, முதல்வருக்கும் அந்த கடித்தினை அனுப்பி வைத்தனர். இந்த சந்திப்பு கூட்டத்தில், அருந்ததியர் இளைஞர் பேரவையின் மாநில தலைவர் வடிவேல் ராமன் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் பேரவையினர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!