ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஒதுக்கீடு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி,  பேரூராட்சி ஒதுக்கீடு விவரம்
X
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாநகராட்சி, பவானி மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் பதவிக்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தலைவர் பதவிக்கு ஆண், பெண், பொது மற்றும் ஜாதிய சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாநகராட்சி பொது - பெண் பிரினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், சத்தியமங்கலம் மற்றும் பவானி நகராட்சிகள் பொது - பெண் பிரிவு, புஞ்சை புளியம்பட்டி நகராட்சி எஸ்.சி - பொது என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோபி நகராட்சி இதுவரை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பொதுவாக மாற்றப்பட்டுள்ளது. ஆண், பெண் என யாரும் போட்டியிடலாம்.

மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சியில், கிளாம்பாடி பேரூராட்சி எஸ்.சி பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாசூர், கூகலூர், அவல்பூந்துறை, வெங்கம்பூர், கொடுமுடி, காஞ்சிகோவில், காசிபாளையம் - கோபி, எலத்தூர், சிவகிரி, நசியனூர், அரியப்பம்பாளையம், பெத்தாம்பாளையம், சென்னிமலை, மொடக்குறிச்சி, நல்லாம்பட்டி, வடுகப்பட்டி, சித்தோடு, பள்ளபாளையம், அத்தாணி, லக்கம்பட்டி, ஆப்பக்கூடல் என, 21 பேரூராட்சிகள் பொது - பெண் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil