நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈரோடு தெற்கில் நாளை முதல் நேர்காணல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈரோடு தெற்கில் நாளை முதல் நேர்காணல்
X
ஈரோடு தெற்கு மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் வருகிற ஜனவரி 20, 21ஆம் தேதிகளில் நேர்காணல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு தெற்கு மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர் பொறுப்புக்குப் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ள திமுகவினருக்கு, மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் தளபதி மன்றத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நேர்காணல் நடைபெற உள்ளது.

எனவே, விருப்ப மனு அளித்த திமுகவினர், ஜனவரி 20ஆம் தேதி காலை 9 மணிக்கு, ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும், 21ஆம் தேதி காலை 9 மணிக்கு, 23 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கும் நேர்காணல் நடக்கிறது. விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture