ஈரோட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு

ஈரோட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு
X

பைல் படம்.

ஈரோட்டில் தனியார் தங்கும் விடுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை.

ஈரோடு நாச்சியப்பா வீதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கடந்த ஒரு வாரமாக சேலத்தை சேர்ந்த பார்த்திபன் (வயது 60) என்பவர் இரவு வந்து தங்கிவிட்டு காலை எழுந்து சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு தூங்க சென்ற அவர் மறுநாள் காலை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி உதவியாளர் அவரது அறைக்கு சென்று பார்த்த போது பார்த்தீபன் பேச்சுமூச்சு இல்லாமல் படுத்திருந்தார். உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிசிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொன்று சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பார்த்தீபன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!