அந்தியூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: இளைஞரணி கொண்டாட்டம்

அந்தியூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: இளைஞரணி கொண்டாட்டம்
X
உதயநிதி ஸ்டாலின்.
அந்தியூரில் திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நாளை திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, அந்தியூர் இளைஞரணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இவ்வகையில் இன்று காலை பத்ரகாளியம்மன் கோவில் அருகில் கொடியேற்று விழாவும், அந்தியூர் பேருந்து நிலையத்தில் இனிப்பு வழங்கும் நிகழ்வும், அரசுப்பள்ளிகளில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும், அரசு மருத்துவமனையில் பால் ரொட்டி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொள்கிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!