சென்னிமலையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

சென்னிமலையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
X

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் திமுக சார்பில் மரம் நடப்பட்டது. 

சென்னிமலை ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் மரக்கன்று நடப்பட்டது.

திருப்பூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் சென்னிமலை கிழக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 44-வது பிறந்த நாள் விழா முகாசிப்பிடாரியூர் ஊராட்சி 1010 நெசவாளர் காலனியில் மரக்கன்று நட்டு கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, சென்னிமலை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பிரபு தலைமை தாங்கினார். இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் மெய்யப்பன், திருப்பூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், துணை அமைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்று நடும் நிகழ்வினை தொடங்கி வைத்தனர்.

விழா ஏற்பாட்டினை சென்னிமலை கிழக்கு ஒன்றியம் திமுக இளைஞர் அணி அமைப்பாளரும், முகாசிப்பிடாரியூர் ஊராட்சி துணை தலைவருமான சதீஷ் என்கிற சுப்பிரமணியம் செய்திருந்தார். இதேபோல் சென்னிமலை மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பாக சென்னிமலை முருகன் கோவில் இடத்தில் 44 மரக்கன்றுகளும், ஒட்டப்பாறை ஊராட்சியில் 44 மரக்கன்றுகளும் நடப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!