உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: டி.என்.பாளையத்தில் நாளை ரேக்ளா பந்தயம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா:  டி.என்.பாளையத்தில் நாளை ரேக்ளா பந்தயம்
X

பைல் படம்.

டி.என்.பாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

ஈரோடு வடக்கு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றிய திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 44-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நாளை (28.11.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு டி.என்.பாளையத்திலிருந்து கணக்கம்பாளையம் பிரிவு வரை குதிரை ரேக்ளா எல்லை பந்தயம் நடைபெறுகிறது. தொடர்ந்து டி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இறகு பந்து போட்டியும், வாணிப்புத்தூர்-பெரியகொடிவேரி-காசிபாளையம் பேரூராட்சிகளில் கோலப்போட்டியும் நடைபெற உள்ளது. இவ்விழாவினை டி.என்.பாளையம் திமுக ஒன்றிய கழக பொறுப்பாளர் எம்.சிவபாலன் ஏற்பாடு செய்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!