தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த 2 காட்டு யானைகள் தாக்கி பசுமாடு உயிரிழப்பு

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த  2 காட்டு யானைகள் தாக்கி பசுமாடு உயிரிழப்பு
X
யானை தாக்கி உயிரிழந்த பசுமாடு.
தாளவாடி அருகே யானை தாக்கியதில் பசுமாடு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி என்ற கிராமத்தை சேர்ந்தவர் புட்டுசித்தா (வயது 60). விவசாயி. இவர் தனது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் 6 மாடுகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் மல்லன்குழி ஊருக்குள் புகுந்தது. பின்னர் விவசாயி புட்டுசித்தாவுக்கு சொந்தமான மாட்டு கொட்டகை தடுப்பு சுவரை உடைத்து சேதப்படுத்தியதோடு, கட்டப்பட்டிருந்த ஒரு பசுமாட்டை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

பின்னர் ஊர் பொதுமக்கள் திரண்டு போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
future of ai in retail