சித்தோடு அருகே இருசக்கர வாகனம் திருட்டு: போலீசாரிடம் சிக்கிய சிறுவர்கள்

சித்தோடு அருகே இருசக்கர வாகனம் திருட்டு:  போலீசாரிடம் சிக்கிய சிறுவர்கள்
X
சிறுவர்கள் திருடி நம்பர் பிளேட்டை உடைக்க முயன்ற இருசக்கர வாகனம்.
சித்தோடு அருகே இருசக்கர வானத்தை திருடிய சிறுவர்கள், நம்பர் பிளேட்டை உடைத்துக்கொண்டு இருக்கும்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த சித்தோடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகையன் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்த நம்பர் பிளேட்டை 3 பேர் உடைத்துக்கொண்டு இருந்தனர்.

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மூவரும் 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் என்றும், இவர்கள் ஈரோடு வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!