கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: வேன் டிரைவர் சாவு

கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: வேன் டிரைவர் சாவு
X

வேன் டிரைவர் முனிராஜ்.

கோபிசெட்டிபாளையம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் வேன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி மகன் முனிராஜ் (21). வேன் டிரைவர். இவர் நேற்று இரவு புதுக்கரைப்புதூர் பகுதியில் நடந்து வரும் கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் மீண்டும் ஒத்தக்குதிரை சாணார் பாளையத்தில் உள்ள வீட்டுக்கு செல்வதற்காக வந்து கொண்டு இருந்தார்.

இதனையடுத்து, முனிராஜ் குட்டைய காட்டூர் பிரிவு அருகே வந்து கொண்டு இருந்தபோது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி முன்னாள் சென்ற, பொம்மநாயக்கம்பாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்த சிவக்குமார் மகன் கிருபா கரன் என்பவரும் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது‌.

இதில் தூக்கி வீசப்பட்டதில் முனிராஜ் சாலையோர மரத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த கிருபாகரன் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு