ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம் காரின் மீது மோதி விபத்து

ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம் காரின் மீது மோதி விபத்து
X

விபத்தில்,  நொருங்கிய காரின் முன்பகுதி.

ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம் காரின் மீது மோதிய விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த ஒருவர், இன்று இரவு 8 மணியளவில் இருசக்கர வாகனத்தில், ஆப்பக்கூடலில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.அப்போது, ஆப்பக்கூடல் அடுத்த சக்தி பாலிடெக்னிக் கல்லூரி முன்பு சென்றபோது, அத்தாணியிலிருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த காரின் மீது பலமாக மோதினார்.


இதில் கார் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட நபருக்கு கைகால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.காயமடைந்த நபரை மீட்ட அக்கம்பக்கத்தினர் கோபி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தகவலறிந்த ஆப்பக்கூடல் போலீசார் நடத்திய விசாரணையில், ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பது தெரியவந்தது. மேலும், போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!