அந்தியூர் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில், கூலித்தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூர் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில், கூலித்தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய, விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் காந்திஜி வீதி சேர்ந்தவர் முனிராஜ் (வயது 52). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று முனிராஜ் தனது மோட்டார் சைக்கிளில் அந்தியூர்-அம்மாபேட்டை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அம்மாபேட்டை அருகே உள்ள பூனாச்சி தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக திடீரென முனிராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் முனிராஜ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முனிராஜை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழி யிலேயே முனிராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது