பவானி அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 ஓட்டுநர்கள் படுகாயம்!

பவானி அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 ஓட்டுநர்கள் படுகாயம்!
X
ஈரோடு மாவட்டம் பவானி அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 2 ஓட்டுநர்கள் படுகாயமடைந்தனர்.

பவானி அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 2 ஓட்டுநர்கள் படுகாயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியிலிருந்து பால் டேங்கர் லாரி ஒன்று மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல், அம்மாபேட்டையில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு பவானி நோக்கி மற்றொரு லாரி வந்து கொண்டிருந்தது.

பவானி-மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் கூலிக்காரன்பாளையம் அருகே வந்த போது இரண்டு லாரிகளும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில், இரண்டு லாரிகளின் முன் பகுதியும் சேதமடைந்ததுடன், இரண்டு லாரி ஓட்டுநர்களும் படுகாயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, இருவரையும் அப்பகுதி மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து பவானி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!