பவானி: மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து

பவானி: மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து
X

பைல் படம்.

பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் காயங்களுடன் தப்பினர்.

பவானி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி எம்.எம்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 22). வரதநல்லூர் கருமகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (21). இருவரும் நண்பர்கள். இவர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் காஞ்சிகோவில் சென்றனர். பவானியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே அவர்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக எதிரே வந்த ஒரு ஆம்னி வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தினேஷ்குமார் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கு கை, கால் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு பவானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து பவானி போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!