அந்தியூர் அருகே புகையிலை போதை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது

அந்தியூர் அருகே புகையிலை போதை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட செல்வன், மைக்கேல் அந்தோனி ராபின்.

அந்தியூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்தனர். சோதனையில், 15 பாக்கெட்டுகள் புகையிலை போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கடையின் உரிமையாளரான செல்வன் (53) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், பள்ளிபாளையம் பகுதியில் மளிகை கடையில், புகையிலை போதை பொருட்கள் விற்பனை செய்த, மைக்கேல் அந்தோனி ராபின் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவர் விற்பனைக்காக வைத்திருந்த 32 பாக்கெட்டுகள் புகையிலை போதை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். இன்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் அந்தியூர் போலீசார் நடத்திய சோதனையில் 47 பாக்கெட்டுகள் புகையிலை போதை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.இதைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!