பங்களாப்புதூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது

பங்களாப்புதூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட ராஜேஷ் மற்றும் பாலு.

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பங்களாப்புதூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள மறைவான இடத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் பாலு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!