பெருந்துறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது
X

பைல் படம்.

பெருந்துறை அருகே அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் துடுப்பதி பகுதியில் பெருந்துறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை கண்டதும் பள்ளிகாட்டூரை பகுதியில் சாக்கு மூட்டையுடன் நின்றிருந்த 2 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அந்த நபர்கள் ராமநாதபுரம் மாவட்டம் முத்துக்களத்தூரை சேர்ந்த குமரேசன் (வயது 28) மற்றொரு நபர் பெருந்துறை கருக்கம்பாளையத்தை சேர்ந்த கவுதம் (வயது 21) என்பது தெரியவந்தது.

மேலும், அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது 98 மது பாட்டில்களை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் 4 மதுபாட்டில்கள் எரிசாராயம் கலந்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!