கோபி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கோபி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
X
கோபி அரசு மருத்துவமனை பைல் படம்
டி.என்.பாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் பின்னால் மற்றாெரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் மேற்கு வீதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 45). இவரது மனைவி மரியா (வயது 38). இவர்கள் இருவரும் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் கணக்கம்பாளையத்தில் உள்ள மரியாவிற்கு அக்கா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், கனமழை பெய்ததால், பின்னர் வீட்டிற்கே திரும்பி அத்தாணி-சத்தி சாலையில் டி.என்.பாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது, கள்ளியங்காடு பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் மனைவி சத்யபிரியாவுடன் இருசக்கர வாகனத்தில், இவர்களின் வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக விஜயன் சென்ற இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையின் பின் பகுதியில் பலத்த காயமடைந்த நிலையில், விஜயனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, விஜயனின் சடலமானது உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, மரியா அளித்த புகாரில் பேரில் பங்களாப்புதூர் போலீசார் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!