செம்மண் கடத்த முயன்ற இரண்டு டிப்பர் லாரிகள், பொக்லைன் பறிமுதல்

செம்மண் கடத்த முயன்ற இரண்டு டிப்பர் லாரிகள், பொக்லைன் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட  இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரம்.

அத்தாணி அருகே செம்மண் கடத்த முயன்ற இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி அருகே உள்ள குப்பாண்டாமபாளையம் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் அவரது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கருவல்வாடிபுதூர் அருகே பெரியபோகநாயக்கர் மகன்கள் மாரசாமி மற்றும் சின்ன மாரசாமி ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியின்றி செம்மணை அள்ளி கடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதிக்கு கிராம நிர்வாக அலுவலர் வருவதைக் கண்ட டிப்பர் லாரி ஓட்டுநர்கள் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து, குப்பாண்டாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன், அரசு அனுமதியின்றி செம்மண்ணை கடத்தியதாக, மாரசாமி மற்றும் சின்ன மாரசாமி ஆகியோர் மீது ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!