அந்தியூர் அருகே தெரு நாய்கள் கடித்ததில் இரண்டு ஆடுகள் உயிரிழப்பு

அந்தியூர் அருகே தெரு நாய்கள் கடித்ததில் இரண்டு ஆடுகள் உயிரிழப்பு
X

இறந்த ஆடுகளை ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர்.

அந்தியூர் அருகே தெரு நாய்கள் கடிதத்தில் விவசாயி வளர்த்து வந்த இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுக்காடு செல்லும் சாலையில் மயில் என்பவர் வசித்து வருகிறார்.விவசாயி. இவர் செம்மறியாடுகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் ஆடுகளுக்கு தீவனம் வைக்க மயில் சென்ற போது 2 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதன் பின்னர் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை ஆய்வு செய்ததில் தெரு நாய்கள் கடித்து கொன்றது தெரியவந்தது. இதனால் 20ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகள் உயிரிழந்ததற்கு வருவாய் துறையினர் உரிய இழப்பீடு வழங்கி தெரு நாய்கள் தொந்தரவை பேரூராட்சி நிர்வாகம் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி மயில் வலியுறுத்தினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!