பவானியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேர் கைது

பவானியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேர் கைது
X

பைல் படம்.

பவானி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேரை சித்தோடு போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையம் அணைக்கட்டு ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதில், பவானி காளிங்கராயன்பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 52) மற்றும் அருளரசி மாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 53) ஆகிய 2 பேரும் வெள்ளைத்தாளில் என் எழுதிக்கொடுத்து பரிசு விழும் என செல்போன் மூலம் தகவல் அனுப்பி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த துண்டு சீட்டுகள் மற்றும் ரூ.1600 ரொக்கப்பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!