/* */

ஈரோட்டில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்த 2 பேர் கைது

ஈரோட்டில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்த 2 பேர் கைது
X
பைல் படம்.

ஈரோடு வடக்கு திண்டல் மாருதி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 54), தலைமுடி வியாபாரி. இவர் ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை வாங்கி வியாபாரம் செய்வதற்காக வீட்டில் வைத்திருந்தார். கடந்த மாதம் 2ஆம் தேதி சுதாகர் வீட்டுக்குச் சென்ற 4 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான 7 மூட்டைகளில் இருந்த தலைமுடியை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சென்னைக்கு சென்று அந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சென்னை அம்பத்தூர், எஸ்.வி.நகர், கோபால் தெரு பகுதியைச் சேர்ந்த பொன்முருகன் (வயது 50). சென்னை செங்குன்றம் காட்டுநாயக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த பாபாமுருகன் (வயது 50) என்பதும் இருவரும் சுதாகர் வீட்டில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து, 2 பேரையும் கைது செய்த போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

Updated On: 15 Aug 2022 4:35 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்