அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை கொள்ளை

அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை கொள்ளை
X

பைல் படம்.

அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பெரியார்நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். நிதி நிறுவன அதிபர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகைக்காக குடும்பத்தோடு கரூர் சென்றுள்ளார். இதேபோல், இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சுகந்தி. ஆசிரியர். இவரும், பொங்கல் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்கு குடும்பத்துடன் சென்றார்.

இந்நிலையில் நேற்று இரவு பாலகிருஷ்ணனின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள்‌ திருடிய பின்பு, ஆசிரியர் சுகந்தியின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது, சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினார். மேலும், இதுகுறித்து பாலகிருஷ்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அந்தியூர் திரும்பிய பாலகிருஷ்ணன், தனது வீட்டில் இரண்டரை பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!