கோபி மாவட்ட சிறைச்சாலையில் காசநோய், புகையிலை, தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

கோபி மாவட்ட சிறைச்சாலையில் காசநோய், புகையிலை, தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
X

கோபி மாவட்ட சிறைச்சாலையில் நடந்த விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் கோபி மாவட்ட சிறைச்சாலையில் காசநோய், புகையிலை, தொழுநோய் ஒழிப்பு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கோபி மாவட்ட சிறைச்சாலையில் காசநோய், புகையிலை, தொழுநோய் ஒழிப்பு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் காசநோய், தொழுநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு மற்றும் டெங்கு, மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் ஆலோசனையின் படி நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம் ,நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள்,காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


தொடர்ந்து, புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீங்குகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள், தொழு நோய்க்கான சிகிச்சை கிடைக்கும் இடங்கள் ,தொழு நோயினால் ஏற்படும் அங்கஹீனங்கள் அதற்கான தடுப்பு வழிமுறைகள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், மழைக்கால நோய்கள் மற்றும் அதன் பாதுகாப்பு வழிமுறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், பாதுகாப்பற்ற குடிநீரால் பரவும் நோய்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலக மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் சிவன், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சிவக்குமார், காச நோய் சுகாதார மேற்பார்வையாளர் விவேக், வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் முருகேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) வேலுமணி, சிறைச்சாலை முதன்மை தலைமை வார்டன் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன் பிரகாஷ், செவிலிய உதவியாளர் சுரேஷ் மற்றும் சிறை கைதிகள் 170 பேர்கள் கலந்து கொண்டனர்.

முகாமின் இறுதியாக புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!