பெருந்துறை சிப்காட் தனியார் தொழில் நிறுவனத்தில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம்
சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழில் நிறுவனத்தில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாமில் எடுத்த படம்.
பெருந்துறை சிப்காட் தனியார் தொழில் நிறுவனத்தில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டாரம் சிப்காட் பகுதியில் உள்ள ஜெ.ஜெ.மில்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காச நோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நேற்று (ஜன.9) நடைபெற்றது.
இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள், அதன் பாதிப்புகள், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய்க்கான இலவச பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் இல்லா ஈரோடு உருவாக்கத்தில் தொழிலாளர்களின் பங்கு குறித்து சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.
முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவ பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் பேபி, நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் மரு.கிருத்திகா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சுரேஷ், காசநோய் சுகாதார பார்வையாளர் கற்பகம், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்கள், நடமாடும் மருத்துவக் குழு உறுப்பினர்கள் செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் தொழிலாளர்கள் 150 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பரிசோதனை, சளி பரிசோதனை, இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu