பெருந்துறை துடுப்பதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம்

பெருந்துறை துடுப்பதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம்
X

துடுப்பதி வீராச்சிபாளையம் பகுதியில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள துடுப்பதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (ஜன.8) நடைபெற்றது.

பெருந்துறை அருகே உள்ள துடுப்பதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (ஜன.8) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டாரம் பெத்தாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட துடுப்பதி ஊராட்சி வீராச்சிபாளையம் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதன் சர்மா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சுரேஷ் ,காசநோய் சுகாதாரப் பார்வையாளர் கற்பகம், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்கள், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 80 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!